ஊருக்குள் செல்லாத 2 பஸ்கள் மீது வழக்கு

காரிமங்கலம் ஊருக்குள் செல்லாமல் பைபாஸ் வழியாக சென்ற 2 தனியார் பஸ்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-06-22 14:49 GMT

காரிமங்கலம்

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக தினமும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகிறது. காரிமங்கலம் பைபாஸ் சாலையில் அகரம் பிரிவு சாலையில் விபத்துகளை தடுக்க சாலை முழுமையாக அடைக்கப்பட்டது. இதனால் பஸ்கள் காரிமங்கலத்திற்குள் செல்லாமல் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று வந்தன. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். இந்த நிலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி மற்றும் போக்குவரத்துறை பணியாளர்கள் கெரகோடஅள்ளி பிரிவு சாலையில் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது காரிமங்கலம் ஊருக்குள் செல்லாமல் பைபாஸ் வழியாக சென்ற 2 தனியார் பஸ்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஊருக்குள் செல்லாத பஸ்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்