வேப்பனப்பள்ளி அருகே பெண் மீது தாக்குதல்; 4 பேர் மீது வழக்குப்பதிவு

வேப்பனப்பள்ளி அருகே பெண் மீது தாக்குதல்; 4 பேர் மீது வழக்குப்பதிவு

Update: 2022-06-05 16:52 GMT

வேப்பனப்பள்ளி:

வேப்பனப்பள்ளி அருகே உள்ள பூதிமூட்லு கிராமத்தை சேர்ந்தவர் கல்பனா (வயது 280. இவருடைய 8 வயது மகன் நிதிசும், அதே பகுதியை சேர்ந்த குள்ளியம்மா பேரன் மகேஷ் ஆகியோர் தெருவில் விளையாடி கொண்டிருந்தபோது சண்டை போட்டதாக கூறப்படுகிறத. இந்த சண்டையானது பெற்றோர்களிடையே கூறியதையடுத்து, கல்பனாவை அதே பகுதியை சேர்ந்த லட்சுமியம்மா, உமா, சாவித்திரி, குள்ளியம்மா ஆகியோர் அடித்து தாக்கி உள்ளனர். இதில் தலையில் காயம் அடைந்த கல்பனா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து கல்பனா அளித்த புகாரின் பேரில் வேப்பனப்பள்ளி போலீசார் 4 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்