மாணவியை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் மீது போக்சோவில் வழக்கு
ஓசூரில் மாணவியை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் மீது போக்சோவில் வழக்கு பதிவு.;
ஓசூர்:
ஓசூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தேன்கனிக்கோட்டை அருகே குடிசநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சுமன் (வயது 19). இவர் பர்கூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி மாணவி ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலில் இருந்தார். அப்போது அங்கு சென்ற சுமன் வாகன நிறுத்துமிடத்தில் மாணவியின் கையை பிடித்து இழுத்து தன்னை காதலிக்க வற்புறுத்தியாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தாய் ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சுமன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.