கல்லூரி மாணவிக்கு இளம்வயது திருமணம்- 5 பேர் மீது வழக்கு

தர்மபுரி அருகே இளம்வயது திருமணம் தொடர்பாக 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;

Update: 2023-10-18 19:03 GMT

காரிமங்கலம்

தர்மபுரி அருகே உள்ள மாதுபட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது26). இவருக்கும், தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் காரிமங்கலம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவிக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் தேவிரஅள்ளி பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் நடந்தது.

இதுகுறித்து பாலக்கோடு அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது மாணவிக்கு சட்ட விதிகளை மீறி இளம்வயதில் திருமணம் செய்தது தெரிய வந்தது. இதைடுத்து போலீசார் மாணவியை மீட்டு அரசு காப்பகத்தில் சேர்த்தனர். மேலும் பிரகாஷ் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்