தர்மபுரி:
தர்மபுரி டவுன் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 75). இவர் பத்திரம் விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். இவர் 10 வயது சிறுமியை சாக்லேட் தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது பற்றி தர்மபுரி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் பாலசுப்பிரமணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.