குறு வட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு கேரம் போட்டிகள்

குறு வட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு கேரம் போட்டிகள் நடந்தன.;

Update: 2023-07-28 18:50 GMT

பெரம்பலூர் குறு வட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கேரம் போட்டிகள் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. போட்டிகளை பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசாமி தொடங்கி வைத்தார். 14, 17, 19 ஆகிய வயதுகளுக்கு உட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக கேரம் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்களை களரம்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரும், குறு வட்ட போட்டிகளுக்கான செயலாளருமான ஆறுமுகம், உடற்கல்வி ஆசிரியரும், இணை செயலாளருமான பாஸ்கர் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணவ-மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்