தொழில்நெறி வழிகாட்டும் கருத்தரங்கு
தொழில்நெறி வழிகாட்டும் கருத்தரங்கை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடந்தது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மண்டல இணை இயக்குனர் ஜோதிமணி, வருவாய் கோட்டாட்சியர் வினோத்குமார், துணை இயக்குனர் அருணகிரி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவிதா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஆனந்தன், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் சுரேஷ்பாபு, கல்லூரி முதல்வர் பூங்குழலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.