கருப்பூர் சுங்கச்சாவடியில் கட்டணத்தை குறைக்க கோரி வாகன உரிமையாளர்கள் முற்றுகை

கருப்பூர் சுங்கச்சாவடியில் கட்டணத்தை குறைக்க கோரி வாகன உரிமையாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-06 23:23 GMT

கருப்பூர்:

சுங்கச்சாவடி

சேலம் - ஓமலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பெரியார் பல்கலைக்கழகம், அருகில் சுங்கச்சாவடி உள்ளது. இங்கு ஓமலூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து சேலம் மாநகர் பகுதியில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு (லோக்கல்) உள்ளூர் கட்டணம் ரூ.15 வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது பாஸ்டேக் மூலம் ரூ.60 தானாகவே வங்கி கணக்கில் எடுத்துக கொள்கிறது.

உள்ளூர் வாகனங்கள் நாள் ஒன்றுக்கு 4 முறை ஓமலூரில் இருந்து சேலத்திற்கு மாணவர்களை அழைத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதில் தினமும் ரூ.300 முதல் ரூ.500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முற்றுகை போராட்டம்

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள் நேற்று காலை கட்டணத்தை திரும்ப தரக்கோரியும் மற்றும் கட்டணத்தை குறைக்க கோரியும் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சேலம் மேற்கு மாவட்ட த.மா.கா. தலைவர் சுசீந்திர குமார் தலைமை தாங்கினார். மாநில இளைஞர் அணி பொதுச்செயலாளர் ரகு நந்தகுமார், சுற்றுலா வேன் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் சரவணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.் பின்னர் டோல் பிளாசா பொது மேலாளர் சாம்சவ்வை சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் கருப்பூர் சுங்கச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்