நெய்வேலியில் கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி

நெய்வேலியில் கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிாிழந்தாா்.

Update: 2023-01-17 18:45 GMT

நெய்வேலி, 

நெய்வேலி அருகே உள்ள வடக்கு வெள்ளூர் தொல்காப்பியர் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் மகன் பிரேம்நாத்(வயது 23). டிப்ளமோ முடித்துள்ள இவர், 26-வது வட்டத்தில் உள்ள தனது நண்பர்களை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு நண்பர்களை பார்த்து விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். என்.எல்.சி. அனல் மின் நிலையம்-1 விரிவாக்கம் எதிரே சென்றபோது நெய்வேலி புதிய அனல் மின் நிலையத்தில் செயற்பொறியாளராக வேலை செய்யும் பிரதாப் என்பவர் ஓட்டி வந்த கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயமடைந்த பிரேம்நாத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக என்.எல்.சி. மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே பிரேம்நாத் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து தெர்மல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்