தூக்குப்போட்டு கார் புரோக்கர் தற்கொலை

தூக்குப்போட்டு கார் புரோக்கர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2023-07-26 19:46 GMT

திருச்சி செந்தண்ணீர்புரம் முத்து மணி டவுன் பகுதியைச் சேர்ந்தவர் கபிலன் (வயது 43). இவர் கார் கன்சல்டிங் நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிலையில் அவர் சிலரிடம் பணம் கடனாக பெற்றார். பின்னர் அதனை திருப்பி செலுத்த இயலாததால் மன உளைச்சலில் இருந்த கபிலன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி சத்யா பொன்மலை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்