பாகற்காய் விலை கிலோவுக்கு ரூ.6 குறைந்தது

தர்மபுரி உழவர் சந்தைக்கு வரத்து அதிகரிப்பால் பாகற்காய் விலை கிலோவுக்கு ரூ.6 குறைந்தது.;

Update: 2023-10-18 18:59 GMT

பாகற்காய் பந்தல்களில் வளர்க்கப்படும் செடி வகையைச் சேர்ந்தது. தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தோட்டங்களில் பந்தல் அமைத்து பாகற்காய் சாகுபடி செய்யப்படுகிறது. இதேபோல் வீடுகளிலும் பாகற்காய் வளர்ப்பது வழக்கமாக உள்ளது. தர்மபுரி உழவர் சந்தைக்கு கடந்த வாரம் பாகற்காய் வரத்து குறைந்தது. இதனால் அதன் விலை அதிகரித்தது. ஒரு கிலோ பாகற்காய் ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று உழவர் சந்தைக்கு பாகற்காய் வரத்து மீண்டும் அதிகரித்தது. இதன் காரணமாக நேற்று முன்தினம் ரூ.34-க்கு விற்பனை செய்யப்பட்ட பாகற்காய் நேற்று ஒரே நாளில் கிலோவிற்கு ரூ.6 குறைந்தது. தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று 1 கிலோ ரூ.28-க்கு விற்பனையானது. வெளி மார்க்கெட்டுகளில் ரூ.35 வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டது. பாகற்காய் விலை ஒரே நாளில் கணிசமாக குறைந்ததால் அதை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்