அம்மன் கோவில்களில் குத்துவிளக்கு பூஜை
அம்மன் கோவில்களில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.
அரிமளம்:
அரிமளம் ஊராட்சி ஒன்றியம், ஓணாங்குடி கிராமத்தில் வீரமாகாளியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 508 பெண்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கிற்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் புதுக்கோட்டையில், அரியநாச்சியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டு குத்து விளக்கிற்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.