மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-07-26 20:01 GMT

மணிப்பூர் கலவரத்தில் பழங்குடி இன பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நேற்று அருணாசலம் மன்றம் அருகில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.இதில் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமை தாங்கினார். இதில் சிறுபான்மை பிரிவு மாநில துணைத் தலைவர் பேட்டரிக் ராஜ்குமார், கவுன்சிலர் ரெக்ஸ், சோபியா விமலா ராணி, நிர்வாகிகள் உள்பட கலந்து கொண்டனர். இதே போல் சத்திரம் பஸ் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன் தலைமை தாங்கினார். இதில் பங்கேற்றவர்கள் மத்திய பா.ஜ.க. அரசையும், மணிப்பூர் பா.ஜ.க. அரசையும் கண்டித்து தீ பந்தம் ஏந்தி இருந்தனர்.திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், திருவெறும்பூர் கடைவீதியில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் வழக்கறிஞர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். திருவெறும்பூர் வடக்கு வட்டார தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்