கால்வாய்களை தூர்வார வேண்டும்
கால்வாய்களை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆற்காடு நகரில் உள்ள பெரும்பாலான கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளன. திடீர் மழையால் பெரும்பாலான இடங்களில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் மற்றும் மழை நீர் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் நகரில் உள்ள பெரும்பாலான கால்வாய்கள் அகலப்படுத்தப்பட்டு தூர்வாரினால் இதுபோன்ற கழிவு நீர் சாலையில் செல்வதை தடுக்கலாம் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.