கஞ்சா விற்ற விவசாயி சிக்கினார்

Update:2023-05-13 00:30 IST

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் மற்றும் போலீசார் பெட்டமுகிலாளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொடகரை பிரிவு சாலை அருகே கஞ்சா விற்று கொண்டிருந்த கொடகரை செனராயன் கொல்லை கிராமத்தை சேர்ந்த சிவலிங்கம் (வயது 48) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 900 கிராம் கஞ்சா மற்றும் ரூ.10 ஆயிரத்து 650 பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்