கஞ்சா வைத்திருந்த 4 பேர் பிடிபட்டனர்

Update:2023-04-28 00:30 IST

கிருஷ்ணகிரி மது விலக்கு அமல் பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி மற்றும் போலீசார் பாஞ்சாலியூர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சாவுடன் நின்றிருந்த காவேரிப்பட்டணம் அருகே கொடகூரை பகுதியை சேர்ந்த சுதந்திரம் (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே மதுவிலக்கு அமல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சோபியா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்தவரை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் திருப்பத்தூர் மாவட்டம் சி.கே.ஆசிரமம் பகுதியை சேர்ந்த திலிப் (24) என்பதும், அவர் 100 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை ேபாலீசார் கைது செய்தனர். இதேபோல் வேப்பனப்பள்ளி அருகே உண்டியல்நத்தம் கிராமத்தில் கஞ்சா வைத்திருந்த பூதிமுட்லு பகுதியை சேர்ந்த பிரசாந்த் (26), ஓசூர் கோவிந்த அக்ரஹாரம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த பேகேப்பள்ளியை சேர்ந்த ஞானசியம் மண்டல் (40) ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்