கஞ்சா வைத்திருந்த வாலிபர் பிடிபட்டார்

Update:2023-04-07 00:30 IST

காவேரிப்பட்டணம்:

கிருஷ்ணகிரி மது விலக்கு அமல் பிரிவு போலீசார் காவேரிப்பட்டணம் தேர்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா வைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அந்த வீட்டில் 940 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா வைத்திருந்த காவேரிப்பட்டணம் தேர்பேட்டை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த லோகேஷ் (வயது 22) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்