கஞ்சா விற்றவர் சிக்கினார்

Update:2023-02-13 00:30 IST

மாரண்டஅள்ளி:

மாரண்டஅள்ளி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாபர் உசேன், சப்-இன்ஸ்பெக்டர் தணிகாசலம் மற்றும் போலீசார் அந்த பகுதியில் சென்று ரோந்து சென்றனர். அப்போது திம்லா மேடு பஸ் நிறுத்த பகுதியில் கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த மாது (வயது 45) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 700 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்