ஆந்திராவில் இருந்து சூளகிரிக்கு பஸ்சில் கஞ்சா கடத்திய பெண்கள் உள்பட 3 பேர் கைது

Update:2023-07-06 00:30 IST

ஓசூர்:

கிருஷ்ணகிரி அருகே மாசி நாயக்கனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த திம்மராயன் மனைவி சுமா (வயது 29), கர்நாடக மாநிலம் ஒசக்கோட்டா பகுதியை சேர்ந்த கோவிந்தப்பா மனைவி சாரதம்மா (39), கொள்ளேகால் அருகே ராமாபுரம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் (52) ஆகிய 3 பேர் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து பொதுமக்கள் மற்றும் கஞ்சா வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் இருந்து ஒரு அரசு பஸ்சில் அவர்கள் 3 பேரும் 10 கிலோ கஞ்சாவை சூளகிரி அருகே காளிங்கவரம் பாரதிபுரம் பகுதிக்கு கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் பங்கஜம், சப்-இன்ஸ்பெக்டர் சிற்றரசு தலைமையில் போலீசார் அப்பகுதிக்கு சென்று சுமா உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்