வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படுமா?

வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படுமா?;

Update: 2022-10-07 18:45 GMT

நாகை- நாகூர் சாலை போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக உள்ளது. நாகையில் இருந்து நாகூர் வழியாக அரசு மற்றும் தனியார் பஸ், மீன் ஏற்றி செல்லும் வாகனங்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள் தினமும் அதிக அளவில் சென்று வருகி்ன்றன. குறிப்பாக காலை நேரத்தில் ஏராளமானோர் பணி நிமித்தம் காரணமாக இந்த சாலையில் பயணிக்கின்றனர். நாகூரில் இருந்து நாகை வரை விபத்துகளை தவிர்க்கும் வகையில் வேகத்தடை அமைக்கப்பட்டது. இந்த வேகத்தடையில் இதுவரை வர்ணம் பூசப்படாமல் உள்ளது.

இதனால் வேகமாக வரும் வாகனங்களுக்கு வேகத்தடை இருப்பது ெதரியாமல் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேகத்தடையில் வர்ணம் பூசப்பட்டால் வாகனங்களுக்கு வேகத்தடை இருப்பது தெரியும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாகூர் நாகை சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளில் வர்ணம் பூச வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்