பாசிக்குளம் தூர்வாரி சுத்தப்படுத்தப்படுமா?
கொள்ளிடம் அருகே தண்ணீர் பந்தல் கிராமத்தில் பாசிக்குளம் தூர்வாரி சுத்தப்படுத்தப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்;
கொள்ளிடம்;
கொள்ளிடம் அருகே தண்ணீர் பந்தல் கிராமத்தில் பாசிக்குளம் தூர்வாரி சுத்தப்படுத்தப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
பாசிக்குளம்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தண்ணீர் பந்தல் கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான பாசிக்குளம் உள்ளது. 20 வருடங்களுக்கு முன்பு இந்த குளம் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு பயன்பட்டு வந்தது. அப்பகுதியில் நிலத்தடி நீரை தேக்கி வைப்பதற்கும், அப்பகுதியில் உள்ள கால்நடைகளை குளிப்பாட்டுவதற்கும் இந்த குளம் பயன்பட்டு வந்தது. முக்கிய விழாக்களின் போது இந்த குளத்திலிருந்து தண்ணீர் எடுத்துச் சென்று வழிபாடு செய்வதும், வழக்கமாக இருந்து வந்தது. 1.5 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த பொது குளத்துக்கு தண்ணீர் சென்று தேங்கும் வகையில் வசதியும், குளத்தில் தேங்கிய தண்ணீர் எளிதில் வெளியேறி செல்லும் வகையிலும் வடிகால் வாய்க்கால் வசதியும் அமைக்கப்பட்டிருந்தது.
தூர்வார கோரிக்கை
ஆனால் காலப்போக்கில் இந்த குளம் ஆக்கிரமிக்கப்பட்டு குறுகி நெய்வேலி காட்டாமணக்கு செடி உள்ளிட்ட புதர் மண்டி குளத்துக்கான தடயம் மறைந்து வருகிறது. இந்த குளத்தில் பழைய முறைப்படி ஆக்கிரமிப்புகளை அகற்றியும், தூர்வாரி சுத்தப்படுத்தி தண்ணீரை தேக்கி மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தண்ணீர் பந்தல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.