தாமரை குளத்தை ஆக்கிரமித்துள்ள வெங்காயத்தாமரை செடிகள் அகற்றப்படுமா?

தாமரை குளத்தை ஆக்கிரமித்துள்ள வெங்காயத்தாமரை செடிகள் அகற்றப்படுமா?

Update: 2023-03-17 18:45 GMT

கூத்தாநல்லூர் அருகே தாமரை குளத்தை ஆக்கிரமித்துள்ள வெங்காயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாமரைகுளம்

கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலத்தில் உள்ள கிளியனூர் பெருமாள் கோவில் எதிரே தாமரைகுளம் உள்ளது. இந்த குளத்தினை கிளியனூர் பெருமாள் கோவில் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, டிங்கு தெரு, மேலத்தெரு, வடக்கு தெரு, தெற்கு தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கிராம மக்கள் குளிப்பதற்கும், ஆடைகள் துவைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த குளத்தில் பரவலாக வெங்காயத்தாமரை செடிகள் தண்ணீரில் மிதந்து காணப்பட்டது.

துர்நாற்றம் வீசுகிறது

தற்போது குளத்தை வெங்காயத்தாமரை செடிகள் சூழ்ந்து ஆக்கிரமித்துள்ளது. இதனால் குளம் இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு மறைத்து விட்டது. மேலும் வெங்காயத்தாமரை செடிகள் அழுகி நீண்ட நாட்களாக தண்ணீரிலேயே கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசு உற்பத்தி அதிகரித்து சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. இதனால் குளத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாமரைகுளத்தை ஆக்கிரமித்துள்ள வெங்காயத்தாமரை செடிகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்