ஆபத்தான மின்கம்பம் சீரமைக்கப்படுமா?

ஆபத்தான மின்கம்பம் சீரமைக்கப்படுமா?;

Update: 2023-02-22 18:45 GMT

திருக்கண்ணபுரம் ஊராட்சியில் ஆபத்தான மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலை நடுவே மின்கம்பம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் ஊராட்சி ராஜா தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதி மக்களின் நலன் கருதி திருக்கண்ணபுரம் ஊராட்சி பகுதியில் இருந்து மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் ராஜா தெருவில் சாலை நடுவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு மின்கம்பம் ஒன்று அமைக்கப்பட்டது. தற்போது இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதம் அடைந்து எந்த நேரத்திலும் சாய்ந்து கீழே விழும் அபாய நிலையில் உள்ளது.

சீரமைக்க கோரிக்கை

இதுகுறித்து மின்வாரிய துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும், சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். மின்கம்பத்தை சீரமைக்க ஒரு ஆண்டுக்கு முன்பு மின்வாரிய துறை அதிகாரிகள் மின்கம்பத்தை இறக்கி வைத்தார்கள்.

ஆனால் இன்று வரை மின்கம்பம் மாற்றப்படாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை நடுவில் அமைந்துள்ள ஆபத்தான மின்கம்பத்தை சீரமைத்து தர வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்