விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கான முகாம்
மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கான முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.;
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி தாலுகா அம்மாணங்கோவில் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட புதுப்பேட்டை கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் தமிழக அரசு வழங்கும் கலைஞரின் மகளிர் உரிமை திட்டம் குறித்த விண்ணப்பம் பதிவேற்றம் செய்வதற்கான முகாம் நடந்தது.
இதனை திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி நேற்று திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் முகாமில் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்வது குறித்து கேட்டறிந்து முகாமின் முன்னேற்பாடுகள் குறித்து அறிவுரை வழங்கினார்.
ஆய்வின் போது நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார், மண்டல துணை தாசில்தார் நடராஜன், முகாம் பொறுப்பு அலுவலர் தீர்த்தகிரி ஆகியோர் உடன் இருந்தனர்
அதன் பிறகு நாட்டறம்பள்ளி ஒன்றிய பகுதிகளில் உள்ள பல்வேறு ரேஷன் கடைகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் நேரில் சென்று மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்தார்.