தர்மபுரி மாவட்ட மைய நூலகம், அரசு கலைக்கல்லூரி மற்றும் விஜய் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான படிப்புக்கால பயிற்சி முகாம் தர்மபுரியில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட மைய நூலகர்.மாதேஸ்வரன் தலைமை தாங்கினார். அரசு கலைக் கல்லூரி தமிழ் துறை உதவி பேராசிரியர் சிவப்பிரகாசம் முன்னிலை வகித்தார்.
இந்த முகாமில் தமிழ்நாடு அறிவியல் இயக்க தர்மபுரி மாவட்ட தலைவர் பழனி கலந்துகொண்டு வாசிப்பை சுவாசிப்போம் என்கின்ற தலைப்பில் பேசினார். இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் இரண்டாம் நிலை நூலகர் சுப்பிரமணி நன்றி கூறினார்.