பயிற்சி முகாம்

பயிற்சி முகாம் நடைபெற்றது

Update: 2023-05-10 18:45 GMT

இளையான்குடி

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் இளையான்குடி ஒன்றியத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுவது பற்றி பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சி அளவிலான முதன்மை குழு உறுப்பினர்களான ஊராட்சி மன்ற தலைவர்கள், பேரூராட்சி உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களின் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்கள், அனைவருக்கும் காலை உணவு திட்டத்தின் வழிகாட்டி நெறிமுறைகள் பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டன. இப்பயிற்சியை இளையான்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ரஜினி தேவி தலைமையேற்று நடத்தி வைத்தார். உதவி திட்ட அலுவலர் குபேந்திரன் கலந்துகொண்டு விளக்க உரையாற்றினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தமயந்தி மற்றும் வட்டார இயக்க மேலாளர் சுந்தரமூர்த்தி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செய்திருந்தார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்