செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம்

திருப்பத்தூரில் செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

Update: 2023-02-17 18:45 GMT

திருப்பத்தூர்

திருப்பத்தூர் சீரணி அரங்கம் அருகில் கால்நடை பராமரிப்புத்துறை தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் சார்பில் செல்லப்பிராணிகளுக்கான வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவச தடுப்பூசி முகாம் நடைபெற்றது. திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலாராணி நாராயணன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இயக்குனர் நாகநாதன், துணை இயக்குனர் ராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமின் சிறப்பு விருந்தினராக குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டார். இதில் சுமார் 90-க்கும் மேற்பட்ட வீட்டு வளர்ப்பு பிராணிகளான நாய் மற்றும் பூனைகளுக்கு வெறி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாமில் மாவட்ட விழிப்புணர்வு குழு உறுப்பினர் கே.எஸ்.நாராயணன், கவுன்சிலர்கள் உதயசண்முகம், ஹரிசரண்யா, கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வும் நோய் தடுப்பு மாத்திரையும் வழங்கப்பட்டது. முன்னதாக பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி அனைவரையும் வரவேற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்