நாமக்கல்லில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம்

Update: 2023-01-31 18:45 GMT

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் வட்டார வள மையத்துக்கு உட்பட்ட பிறந்தது முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. மாவட்ட உதவி திட்ட அலுவலர் பாஸ்கர் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர்கள் மாதவன், சந்திரவதனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் மாணவர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்குதல், அடையாள அட்டை புதுப்பித்தல், அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்தல், மாணவர்களுக்கு தேவையான உதவி உபகரணங்கள் அளவீடு செய்தல், மாற்று திறன் கொண்ட மாணவர்களுக்கான முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு பதிவு செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

மேலும் செய்திகள்