தேவகோட்டை,
சிவகங்கை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், தேவகோட்டை ரோட்டரி சங்கம், நிலக்கோட்டை தமியான் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண்சிகிச்சை மற்றும் இலவச லென்ஸ் பொருத்தும் சிறப்பு முகாம் தேவ கோட்டையில் நடைபெற்றது. முகாமிற்கு ரோட்டரி சங்க மாவட்ட துணை ஆளுநர் கணேசன் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க பட்டய தலைவர் ராமநாதன் முன்னிலை வகித்தார்.ரோட்டரி சங்க தலைவர் ஜோசப் செல்வராஜ் வரவேற்றார். மாவட்ட விருது வழங்கும் குழு தலைவர் அருள் செழியன் வாழ்த்துரை வழங்கினார். ராம்நகர் ஆனந்தா கல்லூரி முதல்வர் ஜான் வசந்தகுமார் கன்சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தார். நிலக்கோட்டை தமியான் மருத்துவ மனை ஆக்னேஸ் சேவியர் மற்றும் மருத்துவ குழுவினர் முகாமை நடத்தினர். 125 பயனாளிகளுக்கு கண்கள் தொடர்பான அனைத்து குறைபாடுகளுக்கும் இலவசமாக பரிசோதனை செய்து ஆலோசனை, சிகிச்சை அளிக்கப் ்பட்டது. கண்புரை நோயாளிகள் 15 பேர் நிலக்கோட்டை தமியான் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப் பட்டனர். நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் அய்யப்பன், பவுல் கலந்து கொண்டனர். முகாமை தேவகோட்டை ரோட்டரி சங்க தலைவர் ஜோசப் செல்வராஜ், செயலர் திரவியம், பொருளர் மனோகரன் மற்றும் கம்யூனிட்டி சர்வீஸ் இயக்குனர் சந்திரசேகர் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.