விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெறுகிறது.;
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் உதவி வேளாண்மை அலுவலகத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் அங்கக சான்றளிப்பு தொடர்பான விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் வேளாண்மை துணை இயக்குனர் (உழவர் பயிற்சி) கண்ணையா தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் கேசவராமன் அங்கக சான்றளிப்பு முறையின் உட்கூறுகளை விரிவாக எடுத்துக் கூறினார். துணை வேளாண்மை அலுவலர் தனதுரை அங்கக பண்ணையத்தில் உயிர் உரங்களின் பங்கு பற்றி விரிவாகக் கூறினார். மேலும் தோட்டக்கலை வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை தொழில்நுட்ப மேலாளர் சுகன்யா மற்றும் உதவி தொழில்நுட்ப அலுவலர் சேகர் ஆகியோர் செய்து இருந்தனர்.