நாமக்கல்லில்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்31 பேர் தேர்வு

Update: 2023-07-21 19:00 GMT

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேற்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. 23 தனியார் நிறுவனங்கள் பங்ேகற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்தனர். இந்த முகாமில் 116 வேலை தேடுபவர்கள் நேர்முக தேர்வில் பங்கேற்றனர். அதில் 31 பேர் பல்வேறு தனியார் நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா மாயவன் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்