டீசலை குடித்த கல்குவாரி உரிமையாளர் சாவு

டீசலை குடித்த கல்குவாரி உரிமையாளர் சாவு;

Update: 2023-05-24 19:30 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே உள்ள காரச்சேரி மேற்கு தோட்டத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன்(வயது 52). இவர் கல்குவாரி நடத்தி வந்தார். இவருடைய மனைவி ரேவதி(36). இவர்களுக்கு 15 வயதில் மகனும், 13 வயதில் மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி மாலை 5.30 மணிக்கு விஸ்வநாதன் பேரலில் டீசல் வாங்கி வைத்திருந்தார். அந்த டீசலை பேரலில் இருந்து குழாய் வழியாக பொக்லைனில் நிரப்ப தனது வாயை வைத்து உறிஞ்சினார். அப்போது எதிர்பாராதவிதமாக டீசலை விஸ்வநாதன் குடித்துவிட்டார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை விஸ்வநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்