வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் முன் கேக் வெட்டி கொண்டாட்டம்

வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலை கவுரவிக்கும் வகையில், ரெயில் பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினர்.

Update: 2024-08-15 03:42 GMT

மதுரை,

தெற்கு ரயில்வேயில் மதுரையின் அடையாளமாக திகழ்ந்து வரும் வைகை எக்ஸ்பிரஸ், பகல் நேர பயணத்திற்காக 1977-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் அறிமுகப்படுத்தப்பட்டது.

1984-ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக குளிர்சாதன வசதியுள்ள பெட்டிகள் இணைக்கப்பட்ட பெருமையும் இந்த ரயிலுக்கு உண்டு. அதிக இழுவைத் திறன் கொண்ட என்ஜின் இணைக்கப்பட்டதும் இந்த ரயிலில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரெயிலை அறிமுகம் செய்து 47 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலை கவுரவிக்கும் வகையில், ரெயில் பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினர். முன்னதாக ரெயில் இன்ஜினுக்கு பூமாலை, சாம்பிராணியோடு தேங்காய் மற்றும் பழங்களோடு சூடம் பத்தி கொண்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து ரெயில்வே எக்ஸ்பிரஸில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மாலை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.  

Tags:    

மேலும் செய்திகள்