கரடியை பிடிக்க கூண்டு வைப்பு

பெருங்கரையில் கரடியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது;

Update: 2023-10-13 21:15 GMT

பந்தலூர் அருகே ஏலமன்னா, நெல்லியாளம் அரசு தேயிலை தோட்டம், பெருங்கரை உள்ளிட்ட பகுதிகளில் கரடிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. அவை வீடுகளின் சமையல் அறைகளை உடைத்து, உணவு பொருட்களை சேதப்படுத்துகின்றன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். மேலும் கரடிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறைக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இந்த நிலையில் பிதிர்காடு வனச்சரகர் ரவி, வனவர் பெலிக்ஸ் மற்றும் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கரடிகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். மேலும் பெருங்கரையில் அட்டகாசம் செய்யும் கரடியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்