பெண் பயணி தவறவிட்ட தாலி செயினை ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்

பெண் பயணி தவறவிட்ட தாலி செயினை ஆட்டோ டிரைவர் ஒப்படைத்தார்.

Update: 2022-11-11 17:31 GMT

அரக்கோணம் டவுன்ஹால் தெருவை சேர்ந்தவர் பிரியதர்ஷினி (வயது 34). இவர் நேற்று திண்டிவனம் செல்வதற்காக அரக்கோணம் புதிய பஸ் நிலையத்திலிருந்து புதுச்சேரி செல்லும் பஸ்சில் ஏறியுள்ளார். அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் தாலி செயின் அறுந்து விழுந்துள்ளது. இதனை ஆட்டோ டிரைவர் தண்டபாணி பார்த்துள்ளார். இதுகுறித்து அவர் பிரியதர்ஷினியிடம் தெரிவிப்பதற்குள் பஸ் புறப்பட்டு சென்றுவிட்டது.

அதைத்தொடர்ந்து தாலி செயினை மீட்ட ஆட்டோ டிரைவர், அதனை அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து, செயினை தவறவிட்ட பயணி சென்ற பஸ் விவரத்தையும் தெரிவித்தார். உடனே சப்- இன்ஸ்பெக்டர் தாசன் சேந்தமங்கலம் அருகே சென்று கொண்டிருப்பதை அறிந்து பஸ்சில் பயணம் செய்த பிரியதர்ஷினியை வரவழைத்து விசாரணை நடத்தி தாலி செயினை அவரிடம் ஒப்படைத்தார். மேலும், நேர்மையாக செயல்பட்ட ஆட்டோ டிரைவர் தண்டபாணிக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். 

Tags:    

மேலும் செய்திகள்