ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கை சின்னத்தில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வாக்கு சேகரித்தார்

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கை சின்னத்தில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வாக்கு சேகரித்தார்

Update: 2023-02-23 22:45 GMT

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்கு கேட்டு வீதிகள் தோறும் கூட்டணி கட்சியினர் தீவிரமாக உழைத்து வருகிறார்கள். தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பல நாட்களாக இங்கு தங்கி இருந்து கை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு வீதி வீதியாக பிரசாரம் செய்தார்.

நேற்று அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பொறுப்பாளரும் அமைச்சருமான சு.முத்துசாமியுடன் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார். தொடர்ந்து அவர் 34-வது வார்டுக்கு உள்பட்ட எஸ்.கே.சி. ரோடு, சின்னப்பா வீதி, பெரியண்ணன் வீதி பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.

இந்த பிரசாரத்தின் போது தி.மு.க. செய்தி தொடர்பு மாநில செயலாளர் பி.டி.அரசகுமார், வார்டு செயலாளர் திருநாவுக்கரசு, கவுன்சிலர் ரேவதி திருநாவுக்கரசு, மாவட்ட பிரதிநிதிமதன் மோகன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ராஜேந்திரன், ராம்கண், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் சந்திரசேகரன், பாலு, ஆனந்த், சுப.சண்முகநாதன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்