லாரி மோதி இறைச்சி கடைக்காரர் பலி
ராதாபுரத்தில் லாரி மோதி இறைச்சி கடைக்காரர் பரிதாபமாக இறந்தார்.;
ராதாபுரம்:
ராதாபுரம் நேதாஜி நகரைச் சேர்ந்த ஆத்தி என்பவருடைய மகன் பெருமாள் (வயது 38). இவர் ராதாபுரம்- ஆத்தங்கரை பள்ளிவாசல் ரோட்டில் இறைச்சி கடை நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு ராதாபுரம்- வள்ளியூர் ரோட்டில் தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். சமத்துவபுரம் பாலத்திற்கு மேல்புறம் சென்றபோது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியும், மொபட்டும் மோதிக் கொண்டன. இதில் பெருமாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராதாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.