பிரேக் பழுது காரணமாக புகை வந்ததால் பரபரப்பு - சென்னை வந்த விரைவு ரெயில் நிறுத்தம்
பிரேக் பழுது காரணமாக புகை வந்ததால் நெமிலிச்சேரியில் ரெயில் அவசரமாக நிறுத்தப்பட்டது.;
சென்னை,
திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வந்த விரைவு ரெயிலில் உள்ள இணைப்பு பெட்டியில் திடீரென பிரேக் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக புகை வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நெமிலிச்சேரியில் ரெயில் அவசரமாக நிறுத்தப்பட்டது. உடனடியாக ரெயிலில் இருந்த பயணிகள் வெளியேறினர்.
இந்த நிலையில் இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே ஊழியர்கள் பிரேக் பழுதை சரிசெய்தனர். பின்னர் 20 நிமிடங்கள் தாமதமாக ரெயில் புறப்பட்டுச் சென்றது.