தொழிலதிபர் தூக்குப்போட்டு தற்கொலை

கருங்கல் அருகே தொழிலதிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2023-06-04 18:45 GMT

கருங்கல், 

கருங்கல் அருகே உள்ள நெடியவிளாகம் பகுதியை ேசர்ந்தவர் தம்பிதுரை, சொந்தமாக லாரிகளை வைத்து தொழில் செய்து வருகிறார். இவருைடய மகன் ஸ்மைலின் பிரபுதாஸ் (வயது 32). இவர் தனது தந்தை நடத்தி வந்த லாரி வைத்து தொழிலில் பொறுப்பை ஏற்றி செய்து வந்தார். இவருக்கு திருமணம் முடிந்து ஆல்ட்ரின் எஸ்தர் பாய் (29) என்ற மனைவியும், ஐந்து வயதில் ஒரு மகனும், 6 மாத பெண் குழந்தையும் உண்டு. ஸ்மைலின் பிரபுதாசுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு கடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கடந்த சில நாட்களாக அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று ஸ்மைலின் பிரபுதாஸ் வீட்டின் மேல்மாடியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைகண்ட அவரது குடும்பத்தினர் ஸ்மைலின் பிரபுதாசின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து அவரது மனைவி ஆல்ட்ரின் எஸ்தர் பாய் கருங்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ஸ்மைலின் பிரபுதாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்