பஸ் கண்ணாடி உடைப்பு
சேந்தமங்கலத்தில் பஸ் கண்ணாடியை உடைத்தை மர்ம நபர்களை பலீசார் தேடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியை அடுத்த சேந்தமங்கலத்தில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் தனியார் பேருந்து ஒன்று மர்பநபர்களால் கண்ணாடி உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது.
திருத்தணியில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி செல்லும் தனியார் பஸ் ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியை அடுத்த சேந்தமங்கலத்தில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது மர்பநபர்கள் திடீரென்று கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் பஸ்சை விட்டு அலறியடித்து கீழே இறங்கி ஓடினர்.
இந்த சம்பவம் குறித்து நெமிலி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தரப்பட்டது. போலீசார் வருவதற்கு முன்பே மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து நெமிலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.