அரசு பஸ் படிக்கட்டு திடீரென உடைந்து விழுந்தது

திருவாரூர் அருகே அரசு பஸ் படிக்கட்டு திடீரென உடைந்து விழுந்தது. மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.;

Update: 2022-07-07 18:12 GMT

திருவாரூர் அருகே அரசு பஸ் படிக்கட்டு திடீரென உடைந்து விழுந்தது. மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

படிக்கட்டு உடைந்தது

திருவாரூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் நலன் கருதி காலை மற்றும் மாலை என இருவேளைகளில் நகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி திருவாரூரில் இருந்து கங்களாஞ்சேரி வழியாக நாகூர் வரையிலான நகர பஸ் ஒன்று நேற்று முன்தினம் திருவாரூரில் இருந்து நாகூர் சென்று விட்டு மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர் வந்து கொண்டிருந்தது.

அப்போது கங்களாஞ்சேரி ரெயில்வே கேட் அருகே வேகத்தடையில் பஸ் சக்கரம் ஏறி இறங்கிய போது முன்பக்க படிக்கட்டு உடையும் சத்தம் கேட்டுள்ளது.

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

இந்த சத்தத்தால் டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தியுள்ளார். அதன் பின்னர் அந்தபடி முழுவதுமாக உடைந்து விழுந்தது. இதனால் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர் தப்பினர்.

இதனையடுத்து பின்பக்க படிக்கட்டு வழியாக பயணிகள் அனைவரும் பஸ்சில் இருந்து கீழே இறங்கினர். அவர்கள் மாற்று பஸ் மூலம் திருவாரூர் வந்தடைந்தனர்.

இருப்பினும் பஸ் படிக்கட்டு உடைந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் தகவல் பரவியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்