புதிய வழித்தடத்தில் பஸ் சேவை
வள்ளியூர் அருகே புதிய வழித்தடத்தில் பஸ் சேவையை ஞானதிரவியம் எம்.பி. தொடங்கி வைத்தார்
வள்ளியூர்:
வள்ளியூர் அருகே நம்பிபத்து கிராமத்தில் புதிய பயணிகள் நிழற்குடை திறப்பு விழா, புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்து தொடக்க விழா நடந்தது. தெற்கு வள்ளியூர் பஞ்சாயத்து தலைவி பொன்னரசி தலைமை தாங்கினார். வள்ளியூர் யூனியன் ஆணையாளர் நடராஜன், யூனியன் கவுன்சிலர் பொன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்த்தலைவர் ராஜகுரு வரவேற்றார்.
யூனியன் பொதுநிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடை, வள்ளியூரில் இருந்து ராதாபுரத்திற்கு புதிய வழித்தடத்தில் அரசு டவுன் பஸ் போக்குவரத்தை ஞானதிரவியம் எம்.பி. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வள்ளியூர் பணிமனை மேலாளர் பிரவீன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.