புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்து ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தாா்

புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்து ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தாா்

Update: 2022-07-11 18:34 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பணிமனையில் இருந்து தினமும் 7டி அரசு பஸ் ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, ஒழுகூா் வழியாக கோவிந்தசேரி வரை இயங்கி வந்தது. அந்த பஸ்சை பாணாவரம் வரை இயக்க வேண்டும் என கல்லூரி மாணவா்கள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆா்வலர்கள் நீண்ட நாட்களாக சோளிங்கா் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம் மற்றும் வேலூர் அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளா், ஆற்காடு, சோளிங்கர் போக்குவரத்து பணிமனை மேலாளர்களிடம் கோரிக்கை மனு கொடுத்து தொடா்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர்.

இந்தநிலையில் 7டி பஸ்சை ஆற்காட்டில் இருந்து பாணாவரம் வரை தினமும் நான்கு முறை இயக்க அனுமதியளிக்கப்பட்டது. அதைத்தொடா்ந்து சோளிங்கா் சட்டமன்ற உறுப்பினா் ஏ.எம்.முனிரத்தினம் நேற்று பஸ்போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் அசோகன், பாணாவரம் ஊராட்சிமன்ற தலைவர் அர்ஜூனன், துணைத் தலைவர் சரண்யா, சமூக ஆா்வலர்கள், வார்டு உறுப்பினா்கள், தி.மு.க. தொழிற்சங்க பொறுப்பாளர்கள் உள்பட தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்