அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்

அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

Update: 2022-06-25 16:05 GMT

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் சபரி நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது49). அரசு பஸ் டிரைவர். இவர் நேற்று முன்தினம் மயிலாடுதுறை- சிதம்பரம் புறநகர் பஸ்சை ஓட்டினார். சிதம்பரத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு பஸ்சை ஓட்டி வந்த கணேசன், காமராஜர் பஸ் நிலையத்துக்குள் சென்றுள்ளார். பஸ் நிலையத்தின் நுழைவு வாயிலில் சென்றபோது வழியில் நின்று கொண்டிருந்த 2 பேரை ஒதுங்க சொல்லி ஹாரன் அடித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும், டிரைவர் கணேசனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அவர், மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரை தாக்கியவர்கள் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த பாலா, ராஜேஷ் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அரசு போக்குவரத்துக்கழக டிரைவரை பணி செய்ய விடாமல் தடுத்தது, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் பாலா, ராஜேஷ் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்