பஸ்-கார் நேருக்கு நேர் மோதி விபத்து கணவன்- மனைவி படுகாயம்

பஸ்-கார் நேருக்கு நேர் மோதி விபத்து கணவன்- மனைவி படுகாயம்

Update: 2022-07-24 14:42 GMT

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து சுமார் 60 பயணிகளை ஏற்றிக்கொண்டு வேலூர் நோக்கி தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. ஜோலார்பேட்டையை அடுத்த ராமனூர் அருகே முதலை மடுவு என்ற இடத்தில் சென்றபோது ஆம்பூர் பகுதியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த காரும், தனியார் பஸ்சும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டு ஊராட்சி ஜலகாம்பாறை பகுதியை சேர்ந்த பாக்யராஜ் (வயது 40), இவரது மனைவி பரிமளா (34) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.

பஸ்சில் பயணம் செய்த சுமார் 60 பயணிகள் எந்தவித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அரசு, காதர் கான் மற்றும் போலிசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்த தம்பதியினரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து தனியார் பஸ் டிரைவர் ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்