பஸ்-கார் மோதல்; 3 பேர் படுகாயம்

பஸ்-கார் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.;

Update: 2022-08-29 20:27 GMT

கோவில்பட்டி புது கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (வயது 23), நவநீதன் (35), கோவை அன்னூரை சேர்ந்த கணேசன் (38) ஆகிய 3 பேரும் கோவில்பட்டியில் இருந்து கோவை செல்வதற்காக காரில் வந்து கொண்டிருந்தனர். விருதுநகர் மதுரை ரோட்டில் என்.ஜி.ஓ. காலனி அருகே வந்து கொண்டிருந்தபோது அப்பகுதியில் உள்ள உணவகத்தில் சாப்பிட காரை திருப்பினர். அப்போது மதுரையில் இருந்து விருதுநகர் வந்து கொண்டிருந்த தனியார் பஸ், கார் மீது மோதியது. இதில் கார் பலத்த சேதம் அடைந்தது. காரில் இருந்த சக்திவேல், நவநீதன், கணேசன் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த விருதுநகர் பாண்டியன் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த 3 பேரையும் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் கணேசன் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பஸ் டிரைவர் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கண்ணன் (32) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்