தர்மபுரி அருகே நிற்காமல் சென்றதால் தனியார் பஸ் சிறைபிடிப்பு

Update: 2023-01-17 18:45 GMT

தர்மபுரி:

கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி வரும் ஒரு தனியார் பஸ்ஸில் பழைய தர்மபுரி பகுதியை சேர்ந்த சிலர் வந்தனர். பழைய தர்மபுரியில் அவர்கள் இறங்க வேண்டும் என்று கூறிய இடத்தில் பஸ் நிறுத்தம் இல்லை என்று கூறி டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று பழைய தர்மபுரி பகுதியில் வந்த அந்த தனியார் பஸ்சை வாலிபர்கள் சிலர் வழிமறித்து சிறைபிடித்தனர். அப்போது பஸ் கண்டக்டர் மற்றும் வாலிபர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி டவுன் போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து சிறைபிடிக்கப்பட்ட பஸ் அங்கிருந்து புறப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்