ஈரோடு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி 100 சிறப்பு பஸ்கள் இயக்கம்

தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

Update: 2022-10-20 22:17 GMT


தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. 22 மற்றும் 23-ந்தேதி விடுமுறை என்பதால் தீபாவளி பண்டிகையை கொண்டாட ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பஸ் மற்றும் ரெயில் மூலம் சொந்த ஊர்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

இதன் காரணமாக ஈரோட்டில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் மற்றும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் முன்கூட்டியே தங்களது சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.

100 சிறப்பு பஸ்கள்

பொதுமக்கள் சிரமமின்றி தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஈரோடு மண்டலம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 25-ந் தேதி வரை 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் 11 அரசு போக்குவரத்து கிளைகளில் இருந்து கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, சேலம், மேட்டூர், நாமக்கல் உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் என்றும், 50 கூடுதல் பஸ்கள் பயணிகளின் கூட்டத்தை பொறுத்து இயக்குவதற்கு தயார் நிலையில் அந்தந்த பஸ் நிலையங்களில் நிறுத்தப்பட்டு இருக்கும் என்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்