தனியார் பள்ளி மேலாளர் வீட்டில் திருட்டு

கள்ளக்குறிச்சி அருகே பட்டப்பகலில் தனியார் பள்ளி மேலாளர் வீட்டில் புகுந்து ரூ.60 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-09-01 18:45 GMT

தியாகதுருகம்

தனியார் பள்ளி மேலாளர்

கள்ளக்குறிச்சி அருகே மாடூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆதிமூலம்(வயது 50). தியாகதுருகத்தில் உள்ள தனியார் பள்ளியில் பஸ் மேலாளராக பணிபுரிந்து வரும் இவர் நேற்று முன்தினம் காலை வழக்கமாக பணிக்கு புறப்பட்டு சென்றார். அவரது மனைவி உமா(43) மற்றும் மகன் ஜீவா(21) ஆகியோர் சொந்த வேலையாக வீ்ட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றனர்.

பின்னர் மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் இரும்பு கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜீவா வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

ரூ.60 ஆயிரம் திருட்டு

அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.60 ஆயிரத்தை யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து ஜீவா அவரது பெற்றோருக்கு உடனடியாக தகவல் கொடுத்து வரவழைத்தார்.

பின்னர் இது குறித்து ஆதிமூலம் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

பரபரப்பு

பட்டப்பகலில் தனியார் பள்ளி மேலாளர் வீ்ட்டில் புகுந்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச்சென்ற சம்பவம் மாடூர் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்