வீடுபுகுந்து 5 செல்போன் 2 பவுன் சங்கிலி திருட்டு

மயிலம் அருகே வீடுபுகுந்து 5 செல்போன் 2 பவுன் சங்கிலி திருட்டு மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

Update: 2022-09-18 18:45 GMT

மயிலம்

மயிலம் அருகே உள்ள கீழ் எடையாளம் முருகாநகர் பகுதியை சேர்ந்தவர் அரசு பஸ்கண்டக்டர் ராஜேந்திரன்(வயது 58). இவரது மகள் மீனாவுக்கு பிறந்த முதல் குழந்தையை பார்ப்பதற்காக உறவினர்கள் அவரது வீட்டுக்கு வந்துள்ளனர்.

நேற்று முன் தினம் இரவு வீட்டில் இருந்தவர்களும், உறவினர்களும் வீட்டின் முன் மற்றும் பின்பக்க கதவுகளை திறந்து வைத்துக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தனர். இதை நோட்ட மிட்ட மர்ம நபர் நள்ளிரவில் வீடு புகுந்து 5 செல்போன்கள் மற்றும் மீனாவின் பர்சில் வைத்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை திருடிச்சென்று விட்டான். இதன் மதிப்பு சுமார் ரூ.1¼ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன்கள் மற்றும் தங்க சங்கிலியை திருடிச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்